/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எம்.எல்.ஏ., அலுவலகம் மீது கல்வீச்சு
/
எம்.எல்.ஏ., அலுவலகம் மீது கல்வீச்சு
ADDED : ஆக 03, 2011 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர் : குன்னூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகம் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
குன்னூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் (தி.மு.க.,) அலுவலகம் குன்னூர் உழவர் சந்தை சாலையில் அமைந்துள்ளது. அலுவலகத்தின் வெளிப்புறம் வைக்கப்பட்டுள்ள 'குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்' என்ற பெயர் பலகையை மர்ம நபர்கள் சிலர், நேற்று முன்தினம் இரவு கல்வீசி தாக்கி, சேதப்படுத்தியுள்ளனர். சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் சார்பில் குன்னூர் நகராட்சி கவுன்சிலர் செல்வம் குன்னூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

