/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நுகர்வோர் மன்ற கலந்தாய்வு கூட்டம்
/
நுகர்வோர் மன்ற கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஆக 03, 2011 10:45 PM
ஊட்டி : நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கிராம நுகர்வோர் மன்றங்கள் கலந்தாய்வு கூட்டம் ஊட்டியில் நடந்தது.
இதில், கூட்டமைப்பு பொது செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில், 'நுகர்வோர் அமைப்புகள் மக்களின் குறைகளை அறிந்து உரிய துறைகளுக்கு புகார் தெரிவிக்க வேண்டும். விழாக்காலங்களில் நுகர்வோர்களை ஏமாற்ற கையாளும் நேர்மையற்ற வணிக நடைமுறைகளை கண்டுபிடித்து அருகிலுள்ள காவல் நிலையங்கள் அல்லது மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.' என்றார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், 'நுகர்வோர் விழிப்புணர்வு பெரும்பான்மை மக்களிடையே இல்லாத சூழல் நிலவுகிறது. சிந்தனை செய்யாமல் தேவையற்ற பொருட்களை வாங்கும் அவலம் தொடர்கிறது. தேவையற்ற செலவு தேவையற்ற கடன்சுமை, மன உளைச்சல்கள் இதனாலேயே ஏற்படுகிறது. நுகர்வோர் விழிப்புணர்வுக்கு கிராம நுகர்வோர் மன்றங்கள் செயல்பட வேண்டும்' என்றார். மன்ற அமைப்பாளர்கள் கடந்த கால செயல்பாடுகள் குறித்து பேசினர். நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு மன்றங்களுக்கு வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். கிராம நுகர்வோர் மன்ற அமைப்பாளர்கள் செல்வராஜ், மாரிமுத்து, ஜெயராஜ், ஜெயபிரகாஷ், மோகன், மஞ்சுளா, சிவா, செல்வபழனி, சாந்தி, ரமேஷ், உட்பட பலர் பங்கேற்றனர்.