/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு கேபிள் கட்டுப்பாட்டு அறை திறப்பு
/
அரசு கேபிள் கட்டுப்பாட்டு அறை திறப்பு
ADDED : செப் 02, 2011 11:23 PM
ஊட்டி : ஊட்டியில் அரசு கேபிள் 'டிவி' கட்டுப்பாட்டு அறையை உணவு துறை அமைச்சர் புத்திசந்திரன் துவக்கி வைத்தார்.
மாநில அரசு கேபிள் 'டிவி' சேவை நேற்று முதல் செயல்பட துவங்கியது. அரசு கேபிள் 'டிவி' மூலம் கட்டண சேனல்கள் உட்பட 90 சேனல்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூரில் அரசு கேபிள் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட துவங்கின. ஊட்டி நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கேபிள் 'டிவி' கட்டுப்பாட்டு அறையை உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் துவக்கி வைத்தார். டி.ஆர்.ஓ., நிர்மல் ராஜ் உட்பட கட்டுப்பாட்டு அறைகளின் நிர்வாகிகள், மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.