/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சத்துணவு ஊழியர்களுக்கு பயிற்சி முகாம்
/
சத்துணவு ஊழியர்களுக்கு பயிற்சி முகாம்
ADDED : ஆக 17, 2011 02:21 AM
கூடலூர் : 'அரிசியை ஊர வைத்து வேக வைப்பதன் மூலம் விரைவாக சமைக்க முடியும்' என கூடலூரில் நடந்த சத்துணவு ஊழியர்களுக்கான பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூநலத்துறை மற்றும் சத்துணவு திட்டம் மூலம், சத்துணவு ஊழியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
முகாமை, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) இளம்பரதி துவக்கி வைத்தார். கோவை அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் கல்லூரி விரிவுரையாளர் ராதா பயிற்சி வழங்கிய பேசுகையில்,''அரிசியை அதிகபட்சம் மூன்று முறை கழுவினால், அதன் சத்துகள் இழக்க நேரிடம். அரிசியை கழுவி ஊர வைத்து சமையல் செய்தால், விரைவாக சமைக்க முடியும்; எரிபொருள் வீணாவது தவிர்க்கப்படும்.பூ கோஸ் உள்ளிட்ட கிரை வகைகள் கொழுப்பை குறைக்கிறது. கிரையை தனியாக தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைப்பதை விட வெளியே வைத்து பயன்படுவதே நல்லது. முட்டையை 5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்,'' என்றார். முகாமில், கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜான்சாமுவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.