sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பேரிடரை எதிர்கொள்ள ராணுவத்திடம் ஆலோசனை

/

பேரிடரை எதிர்கொள்ள ராணுவத்திடம் ஆலோசனை

பேரிடரை எதிர்கொள்ள ராணுவத்திடம் ஆலோசனை

பேரிடரை எதிர்கொள்ள ராணுவத்திடம் ஆலோசனை


ADDED : அக் 10, 2011 10:14 PM

Google News

ADDED : அக் 10, 2011 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : நீலகிரியில் வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் பேரிடர் இன்னல்களை கையாள ஒவ்வொரு தாலூகாவிலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.நீலகிரியில் வடகிழக்கு பருவ மழை நவம்பர் மாதத்தில் துவங்கும்.

பருவ மழை காலத்தில் ஏற்படும் பேரிடரை எதிர்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், 'மழை காலங்களில் ஏற்படும் சேதங்கள் குறித்த 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு அல்லது 0423-2444012 என்ற எண்ணிக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்கலாம்; ஒவ்வொரு தாலுகா அலுவலங்களிலும் பேரிடர்களை மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன,' என தெரிவிக்கப்பட்டது.இதன்படி, ஊட்டி தாலுகா அலுவலகம் 0423-2442433; குன்னூர் தாலுகா அலுவலகம் 0423-2206102; கோத்தகிரி தாலுகா அலுவலகம் 0423-271718; குந்தா தாலுகா அலுவலகம் 0423-2508123; கூடலூர் தாலுகா அலுவலகம் 04262-261252 மற்றும் பந்தலூர் தாலுகா அலுவலம் 04262-220734 ஆகிய எண்களில் மக்கள் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்துக்கு பின் நீலகிரி கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது; பேரிடர் காலங்களில் அனைத்து அதிகாரிகளும் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பாதுகாப்பான தங்கும் இடங்களும் கண்டறியப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், தீயணைப்புத்துறை, மின் வாரியம் போன்ற துறைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதை தவிர, கோவை மதுக்கரையில் இயங்கி வரும் ராணுவத்தின் 177வது பட்டாலியன் அதிகாரிகளிடமும் ஆலோசனை செய்யப்பட்டு, பேரிடர் காலங்களில் தயார் நிலையில் இருக்கும் படியும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறினார்.






      Dinamalar
      Follow us