UPDATED : நவ 10, 2026 09:38 AM
ADDED : நவ 10, 2026 09:36 AM

ஊட்டி:
நீலகிரி வக்கீல்கள் சங்க தலைவருக்கான தேர்தலில் பொன். செந்தில்குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவருக்கான தேர்தல் நடந்தது. அதில், நீலகிரி மாவட்ட மகிளா மற்றும் போக்சோ நீதிமன்றத்தின், முன்னாள் அரசு வக்கீல் பொன். செந்தில்குமார் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி முரளிதரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், குடும்ப நல நீதிபதி ஸ்ரீதர், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்மூர்த்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகாஷ் , குற்றவியல் நீதித்துறை நடுவர் ரவி, கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி சோழியா, மூத்த வக்கீல்கள் அனந்த கிருஷ்ணன், ரங்கசாமி, ஆனந்தன், விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
