/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி கேரட், பீட்ரூட் விலை அதிகரிப்பு
/
நீலகிரி கேரட், பீட்ரூட் விலை அதிகரிப்பு
ADDED : பிப் 07, 2024 10:40 PM

குன்னுார் : காலநிலை மாற்றத்தால், நீலகிரி கேரட், பீட்ரூட் விளைச்சல் குறைந்துள்ள நிலையில், விலை உயர்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், உருளைகிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட மலை தோட்ட காய்கறிகள் மேட்டுப்பாளையம், சென்னை, ஈரோடு, திருச்சி, பெங்களூரு உட்பட பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் கேரட் கிலோவிற்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கிடைத்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது, கேரட் கிலோ 50 ரூபாய் முதல் 65 ரூபாய் வரையும், பீட்ரூட் கிலோ 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரையும் கிடைக்கிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த போதும், விளைச்சல் குறைவால், பெரிய பலன் எதுவும் கிடைப்பதில்லை.
கேத்தி விவசாயி ஹரிஹரன் கூறுகையில், ''இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு விதை விதைத்தவுடன் மழை பெய்ததால் கேரட் விளைச்சல் பாதித்தது.
இரண்டு டன் கிடைக்கும் இடத்தில் ஒரு டன் மட்டுமே கிடைக்கிறது. விலை அதிகரித்த போதும், விளைச்சல் குறைவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

