ADDED : ஜூன் 04, 2026 08:38 AM
அ நிறம் | அளவு
குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் மே மாதத்திற்கான, பசுந்தேயிலை விலை கிலோவிற்கு, 16.79 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குன்னூர் தேயிலை மையம் மற்றும் 'இன்கோசர்வ்' மையத்தில், ஏலம் விடப்படும், தேயிலை துாள், விலையின் அடிப்படையில், மாதந்தோறும் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதன்படி,'மே மாதத்திற்கான பசுந்தேயிலை கிலோவுக்கு, 16.79 ரூபாய் வழங்க, தேயிலை வாரியம் நிர்ணயம் செய்துள்ளது.
தேயிலை வாரிய செயல் இயக்குனர் பரணிகுமார் கூறுகையில்,''அந்தந்த மாத ஏலத்தின் அடிப்படையில், அனைத்து தொழிற்சாலைகளும் வழங்க வேண்டும். தேயிலை வாரிய கள அதிகாரிகள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், தேயிலை மேம்பாட்டு உதவி இயக்குனர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவர்,'' என்றார்.
