sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மனுநீதிநாள் கூட்டத்தில் நல திட்ட உதவிகள்

/

மனுநீதிநாள் கூட்டத்தில் நல திட்ட உதவிகள்

மனுநீதிநாள் கூட்டத்தில் நல திட்ட உதவிகள்

மனுநீதிநாள் கூட்டத்தில் நல திட்ட உதவிகள்


ADDED : ஜூலை 24, 2011 02:45 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 1லட்சத்து 57ஆயிரம் ரூபாய் மதிப்பினாலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.சேரங்கோடு சமுதாய கூடத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் தாசில்தார் பாபு வரவேற்றார்.

சமூக நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மல்ராஜ் பேசினார்.தொடர்ந்து, ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பெற்ற 19மனுக்கள் மீதான நடவடிக்கைகள் மேற்கொண்டது குறித்து விளக்கப்பட்டது.



இயற்கை மரணமடைந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா 12 ஆயிரத்து 500 ரூபாய், திருமண உதவி ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய், முதிர்கன்னி உதவித்தொகை இருவருக்கு ஆயிரம் ரூபாய், விதவை உதவித்தொகை ஒருவருக்கு ஆயிரம் ரூபாய், மழையால் வீடிழந்த மூவருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் என மொத்தம் 1 லட்சத்து 57ஆயிரத்து 500 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.ரேஷன்கார்டு கோரி விண்ணப்பித்த 6 பேருக்கு கார்டுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். வருவாய் அலுவலர் மோகன் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us