ADDED : ஜூலை 24, 2011 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டி ஓம் பிரகாஷ் ஆரம்பப்பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்கப்பட்டது.ஊட்டி தெய்வீக நற்பணி அறக்கட்டளை சார்பில், கடந்த 12வது ஆண்டுகளாக ஊட்டி காந்தல் ஓம்பிரகாஷ் ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள், சீருடை மற்றும் ஸ்வெட்டர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பள்ளியில் பயிலும் 220 குழந்தைகளுக்கான நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள், யூனிபாரம், சீருடை ஆகியவை வழங்கப்பட்டது. தெய்வீக நற்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் ஆனந்த்குமார், வரதராஜன், கிருஷ்ணன், டாக்டர் வினோத் மற்றும் பலர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

