sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரி கிராமத்தில் "தெவ்வப்பா' பண்டிகை 25 பைசா செலுத்தி சிறப்பு வழிபாடு

/

நீலகிரி கிராமத்தில் "தெவ்வப்பா' பண்டிகை 25 பைசா செலுத்தி சிறப்பு வழிபாடு

நீலகிரி கிராமத்தில் "தெவ்வப்பா' பண்டிகை 25 பைசா செலுத்தி சிறப்பு வழிபாடு

நீலகிரி கிராமத்தில் "தெவ்வப்பா' பண்டிகை 25 பைசா செலுத்தி சிறப்பு வழிபாடு


ADDED : ஜூலை 28, 2011 01:04 AM

Google News

ADDED : ஜூலை 28, 2011 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஞ்சூர் : மஞ்சூர் அருகே 14 ஊர் கிராம மக்கள் இணைந்து கொண்டாடிய, 'தெவ்வப்பா திருவிழா'வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் 14 படுகரின கிராமங்கள் உள்ளன. ஆண்டு தோறும் இப்பகுதி மக்களால், 'தெவ்வப்பா திருவிழா' கொண்டாடப்படுகிறது. திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு வன கோவிலிலிருந்து ஹெத்தையம்மனை அழைத்து 'காடெஎத்தை' கோவிலுக்கு சென்று, சிறப்பு பூஜை செய்தனர். பின் 14 ஊர் கிராம தலைவர்கள் இரவு முழுவதும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். நேற்று காலை 10.15 மணியளவில் திரளான பக்தர்கள் புடைசூழ காடெஎத்தை கோவிலிலிருந்து ஹெத்தை அம்மனை வனக்கோவிலுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, கிராம மக்கள் நீண்ட வரிசையில் நின்று 25 பைசா காணிக்கை செலுத்தி, அம்மனை வழிபட்டனர். பகல் 2 மணியளவில் மீண்டும் ஹெத்தை அம்மனை காடெஎத்தை கோவிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது. புதியதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்களை வழிபடும் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சிறப்பு பூஜை செய்தனர். இன்று காலை 10.30 மணிக்கு நடக்கும் சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. மாநில உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.










      Dinamalar
      Follow us