/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடையின்றி உரம் வழங்க நடவடிக்கை அவசியம்: நீலகிரி விவசாயிகள் வலியுறுத்தல்
/
தடையின்றி உரம் வழங்க நடவடிக்கை அவசியம்: நீலகிரி விவசாயிகள் வலியுறுத்தல்
தடையின்றி உரம் வழங்க நடவடிக்கை அவசியம்: நீலகிரி விவசாயிகள் வலியுறுத்தல்
தடையின்றி உரம் வழங்க நடவடிக்கை அவசியம்: நீலகிரி விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : மார் 14, 2024 11:34 PM
ஊட்டி;'நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உரங்கள் தடையின்றி கொள்முதல் செய்து வழங்க வேண்டும்,' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டியில் உள்ள, நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்.,) நிறுவன கட்டுப்பாட்டின் கீழ், மாவட்டத்தில் அந்தந்த தாலுகாவில் என்.சி.எம்.எஸ்., நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தேயிலை, மலை காய்கறி பயிர் செய்யும் விவசாயிகள் என்.சி.எம்.எஸ்., வாயிலாக வழங்கப்படும் உரத்தை தான் அதிகளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
தவிர, விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வாயிலாக பெறப்படும் பயிர் கடனுக்கு, 25 சதவீதம் உரம் என்.சி.எம்.எஸ்., மூலம் வழங்கப்படுகிறது. கடந்தாண்டில், 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் பயிர் கடன் வாங்கியுள்ளனர். கடந்தாண்டில் மழை பொய்த்ததால் உரம் எதிர்பார்த்த அளவு தேவைப்படவில்லை.
தடையின்றி வழங்கணும்
நடப்பாண்டில், கோடை மழை பெய்தால் குறிப்பாக தேயிலை தோட்டங்களை பராமரிக்க உரம் தேவைப்படுகிறது. தவிர, முதல் போக மலை காய்கறி விவசாயத்திற்கு, தண்ணீர் வசதி உள்ள பகுதிகளில், 50 சதவீதம் விதைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனால், விவசாயிகளுக்கு உரம் தேவைப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐதராபாத், துாத்துகுடி, ஈரோடு உள்ளிட்ட இடங்களிலிருந்து, யூரியா, பொட்டாஷ், சூப்பர் பாஸ்போட், காம்ப்ளக்ஸ், அமோனிய சல்பேட் உள்ளிட்ட உரங்களை தேவையான அளவு கை இருப்பு வைக்க கூட்டுறவு துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகள் கூறுகையில், 'நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தேவைக்கேற்ப உரங்கள் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு தடையின்றி வழங்க தயாராக உள்ளோம்,' என்றனர்.
விவசாயி ரங்கசாமி கூறுகையில்,''உரத்தேவைக்கு விவசாயிகள் என்.சி.எம்.எஸ்., நிறுவனத்தை தான் நம்பியுள்ளோம். நடப்பாண்டில் மழை பொழிவு ஏற்பட்டவுடன் அனைத்து வகையான உரங்கள் தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை இப்போதே எடுக்க வேண்டும்,'' என்றார்.

