ADDED : செப் 16, 2011 02:08 AM
ஊட்டி:'தங்காடு ஓரநள்ளியில் அபாயகரமான நிலையில் இருக்கும் யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.தங்காடு ஓரநள்ளி கிராம பொதுமக்கள் சார்பில் சிவாநந்தன் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனு:தங்காடு ஓரநள்ளியில் ஆரம்பம் மற்றும் நடுநிலை பள்ளிகள், தேயிலை கொள்முதல் மையங்கள், பஸ் ஸ்டாண்ட் ஆகியவை அமைந்துள்ளன. இப்பகுதியில் யூகலிப்டஸ் மரம் மிகவும் உயரமாக வளர்ந்துள்ளன. மழை காலங்களில் மண்சரிவினால் மர வேர்கள் வெளியே தெரிகிறது.
இதனால்,மரங்கள் கீழேவிழ வாய்ப்புள்ளது. இப்பகுதியிலேயே டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளதால், மழை காலங்களின் போது மரக்கிளைகள் அதன் மீது விழுந்து உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து 8 மாத காலமாக ஊர்மக்கள் மாவட்ட கலெக்டர், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர், மின் வாரியத்துறையினர் ஆகியோரிடம் நேரிலும், தபாலிலும் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சிவாநந்தன் கூறியுள்ளார்.

