/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட விளையாட்டு போட்டிக்கு அழைப்பு
/
மாவட்ட விளையாட்டு போட்டிக்கு அழைப்பு
ADDED : செப் 16, 2011 02:19 AM
ஊட்டி:செப்டம்பர் மாதத்திற்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவசங்கரன்
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாதந்திர விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு
வரப்படுகிறது.
இம்மாதத்திற்கான மாதாந்திர தடகள போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு
தனித்தனியாக பிரிவுகளில் வரும் 20ம் தேதியன்று காலை 10.00 மணி முதல் ஊட்டி
எச்.ஏ.டி.பி., திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.
100
மீ, 200 மீ, 400 மீ, 800மீ, 1500 மீ, 500மீ(ஆ), 300மீ(பெ), 110மீ(ஆ),
100மீ(பெ) மற்றும் 400மீ தடை தாண்டுதல் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம்
தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கோலூண்றி தாண்டுதல், குண்டு, தட்டு, ஈட்டி,
சங்கிலி குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்படுகிறது.போட்டிகளில் பங்கேற்று
ஒவ்வொரு நிகழ்விலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்
வீராங்கனைகளுக்கு ரொக்க பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும்,
முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர் வீராங்கனைகளின் பெயர்கள் மற்றும்
விவரங்கள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறே, அக்டோபர்
2011ம் மாதத்தில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களின் விவரங்களும்
போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டதும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய
தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.2011 ஆகஸ்ட், செப்டம்பர்,
அக்டோபர் ஆகிய மூன்று
மாதங்களில் நடைபெறும் மாதாந்திர விளையாட்டு போட்டிகளில் சிறந்து
விளங்கியவர்கள் தலைமை அலுவலகத்தால் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரி 2012ம்
மாதம் இரண்டாம் வாரத்தில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில்
நடக்கும் மாநில அளவு தடகள போட்டிகளில் கலந்துக்கொள்ள அழைக்கப்படுவர்.
மாநில அளவு போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பயணப்படி,
தினப்படி ஆகியவைகள் மற்றும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை
பெறுபவர்களுக்கு முறையே 5000, 3000, 2000 ரூபாய் மற்றும் சான்றிதழ்களும்
வழங்கப்படும். எனவே, வரும் 20ம் தேதி காலை 10.00 மணிக்கு நடக்கும் மாவட்ட
தடகள போட்டிகளில் பள்ளி, கல்லூரி, விளையாட்டுகுழுவினர் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு சிவசங்கர் கூறியுள்ளார்.

