ADDED : செப் 16, 2011 02:21 AM
பந்தலூர்:பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் தொடர்ந்து பெய்து வரும்
கனமழையில் இரண்டு வீடுகள் இடிந்தன.பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் கடந்த
ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது.
இதனால், சாலையின் பெரிய அளவிலான
பள்ளங்களும், குடியிருப்பு பகுதிகளை ஒட்டி மண் சரிவுகளும் ஏற்பட்டு
வருகிறது. இந்நிலையில், தேவாலா வாழவயல் அடுத்துள்ள செத்தக்கொல்லி
பகுதியில் கணேசன் என்பவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதே பகுதியில்
லோகேஷ் என்பவரது வீட்டின் சுவரும் இடிந்துள்ளது. வீட்டுசுவர் இடிந்தது
குறித்து பாதிக்கப்பட்டவர்களும், தே.மு.தி.க., நிர்வாகி தியாகராஜ என்பவரும்
வருவாய்துறையினருக்கு கடந்த 2 நாட்களாக தகவல் தெரிவித்தும் ஆய்வுக்கு
ஒருவர் கூட வரவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட பயனாளிகள் இடிபாடுகளை எடுக்க
முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

