/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாயி வீட்டில் ஒன்பது சவரன் நகை கொள்ளை
/
விவசாயி வீட்டில் ஒன்பது சவரன் நகை கொள்ளை
ADDED : ஜன 31, 2025 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; ஊட்டி ரூரல் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட லக்குமனை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன்,63. இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த 25ம் தேதி கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள உறவினர் திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றார்.
27ம் தேதி வீட்டுக்கு வந்த போது, முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டினுள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த, 9 சவரன் நகை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரூரல் போலீசில் புகார்அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.