/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி நகராட்சி சாலையோர பூங்காக்களில் பராமரிப்பு இல்லை
/
ஊட்டி நகராட்சி சாலையோர பூங்காக்களில் பராமரிப்பு இல்லை
ஊட்டி நகராட்சி சாலையோர பூங்காக்களில் பராமரிப்பு இல்லை
ஊட்டி நகராட்சி சாலையோர பூங்காக்களில் பராமரிப்பு இல்லை
ADDED : ஏப் 22, 2025 11:30 PM

ஊட்டி, ;ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட சாலையோர பூங்காக்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுவது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 11 சாலையோர பூங்காக்கள் உள்ளன. அதில், டேவிஸ் பூங்கா மற்றும் மத்திய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள பூங்கா ஆகியவை புனரமைக்கப்பட்டு வருகின்றன.
இதர பூங்காக்கள் போதிய பராமரிப்பு இல்லாமல், பொலிவிழந்து காணப்படுகின்றன. சுற்றுலா நகரமான ஊட்டியில், சீசன் நாட்களில் வரும் சுற்றுலாப் பயணிகள், சாலையோர சிறிய பூங்காக்களையும் ஆர்வத்துடன் கண்டுக்களிக்கின்றனர்.
ஆனால், இந்த பூங்காக்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது, பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வரும், அரசு கலை கல்லுாரி  சந்திப்பில் அமைந்துள்ள தேசியக்கொடி நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ள சாலையோர பூங்கா பொலிவு இழந்து காணப்படுவது, அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
எனவே, கோடை விழா நெருங்கி வரும் நிலையில், நகராட்சி பராமரிப்பில் உள்ள எஞ்சியுள்ள  பூங்காக்களை பொலிவு படுத்துவது அவசியம்.

