/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆயுத பூஜையின் போது 'பிளாஸ்டிக்' வேண்டாம்: மாசுக்கட்டுப்பாடு வாரியம் விழிப்புணர்வு

ADDED : செப் 29, 2025 10:01 PM
ஊட்டி:
'ஆயுத பூஜையின் போது 'பிளாஸ்டிக்' பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்,' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
கடந்த, 2019ம் ஆண்டு ஜன., 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. உள்ளாட்சி அமைப்புகள் , தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வாயிலாக தொடர்ந்து சோதனை, கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அக்., 1ம் தேதி ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையின் போது தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துதல், விற்பனை செய்வதை தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு சார்பில் வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைப்பு மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளினால் அபராதம் விதிப்பதோடு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
வியாபாரிகள் இதனை விற்பனை செய்ய வேண்டாம். அவற்றிற்கு மாற்றாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் பரிந்துரைக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்ற பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.