/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முறையான குடிநீர் வினியோகம் இல்லை; அரசு பஸ்சை சிறைபிடித்த பெண்கள்
/
முறையான குடிநீர் வினியோகம் இல்லை; அரசு பஸ்சை சிறைபிடித்த பெண்கள்
முறையான குடிநீர் வினியோகம் இல்லை; அரசு பஸ்சை சிறைபிடித்த பெண்கள்
முறையான குடிநீர் வினியோகம் இல்லை; அரசு பஸ்சை சிறைபிடித்த பெண்கள்
ADDED : ஆக 11, 2025 08:25 PM

கோத்தகிரி; கோத்தகிரி கடைக்கம்பட்டி கிராமத்தில் சில வீடுகளுக்கு, முறையான குடிநீர் வினியோகம் இல்லாததால், அரசு பஸ்சை பெண்கள் சிறை பிடித்தனர்.
கோத்தகிரி நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட, கடைக்கம்பட்டி கிராமத்தில், 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், சில வீடுகளுக்கு கடந்த பல நாட்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால், மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால், அதிருப்தி அடைந்த கிராம பெண்கள் நேற்று காலை கிராமத்திற்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.
அப்போது அங்கு வந்த கிராம முக்கியஸ்தர்கள்; துறை அலுவலர்கள், 'விரைவில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என, உறுதி அளித்ததால், சிறை பிடிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.