/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூங்காவில் இயங்கும் பேட்டரி வாகன கட்டண வசூலுக்கு ரசீது இல்லை; சுற்றுலா பயணியர் அதிருப்தி
/
பூங்காவில் இயங்கும் பேட்டரி வாகன கட்டண வசூலுக்கு ரசீது இல்லை; சுற்றுலா பயணியர் அதிருப்தி
பூங்காவில் இயங்கும் பேட்டரி வாகன கட்டண வசூலுக்கு ரசீது இல்லை; சுற்றுலா பயணியர் அதிருப்தி
பூங்காவில் இயங்கும் பேட்டரி வாகன கட்டண வசூலுக்கு ரசீது இல்லை; சுற்றுலா பயணியர் அதிருப்தி
ADDED : நவ 27, 2024 09:07 PM

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேட்டரி வாகனத்தில் பயணிக்கும் சுற்றுலா பயணியரிடம் கட்டண வசூலுக்கு ரசீது கொடுக்காததால் சுற்றுலா பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், கண்ணாடி மாளிகை, இத்தாலியன் கார்டன், பெரணி இல்லம், கள்ளிச் செடி மாளிகை, கீழ் தோட்டம், புதிய தோட்டம் உள்ளிட்டவைகள் உள்ளன. கோடை, இரண்டாவது சீசனில், பூங்காவில், 270 வகைகளில், 5 லட்சம் மலர்கள் சீசன் சமயத்தில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக காட்சிப்படுத்துகின்றனர். ஆண்டுக்கு, 35 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணியர் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.
வார நாட்கள், தொடர் விடுமுறையில் அதிகமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பூங்காவில் இயக்கும் பேட்டரி வாகன கட்டண வசூலுக்கு, ரசீது கொடுக்காததால் சுற்றுலா பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணியர் கூறுகையில்,'பூங்காவுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்க்க பூங்கா நிர்வாகம் சார்பில், 10 பேர் அமர்ந்து செல்லும் வகையில் பேட்டரி வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், பயணி ஒருவருக்கு, 30 ரூபாய் கட்டணம் வசூல் செய்யும் ரசீது வழங்குவதில்லை.
தற்போதைய காலகட்டத்தில் 'ஜிபே, போன்பே, ஸ்கேன்' உள்ளிட்ட வசதிகள் இருந்தும் பணத்திற்குண்டான ரசீது தராமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,' என்றனர்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் பீபிதா கூறுகையில்,''பேட்டரி வாகனத்தில் பயணிக்க ஒரு நபருக்கு, 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு நாள் எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என்பதை மாலையில் கணக்கிட்டு மொத்தமாக ரசீது போடுகிறோம். பயணிகளிடம் ரசீது கொடுப்பதில்லை,'' என்றார்.