/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோர தடுப்புச்சுவர் இல்லை; வாகன விபத்து ஏற்படும் அபாயம்
/
சாலையோர தடுப்புச்சுவர் இல்லை; வாகன விபத்து ஏற்படும் அபாயம்
சாலையோர தடுப்புச்சுவர் இல்லை; வாகன விபத்து ஏற்படும் அபாயம்
சாலையோர தடுப்புச்சுவர் இல்லை; வாகன விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : அக் 04, 2024 10:09 PM

கோத்தகிரி : கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில், பல இடங்களில் தடுப்பு சுவர் இல்லாததால், மலை பாதையில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
சமவெளி பகுதியில் இருந்து, நீலகிரிக்கு வந்து செல்ல மேட்டுப்பாளையம், குன்னுார், கோத்தகிரி சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோடை விழா நாட்களில், கொண்டை ஊசி வளைவுகள் குறைந்த, கோத்தகிரி சாலையை சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ள இச்சாலையில், வளைவுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வருகின்றன.
பயண நேரம் வெகுவாக குறையும் என்பதால், டிரைவர்கள் இச்சாலையில் சென்று வர விரும்புகின்றனர். இந்நிலையில், சாலையின் பல இடங்களில் கான்ரீட் தடுப்புச்சுவர் உடைந்தும், இரும்பு தடுப்புகள் அமைக்கப்படாமலும் உள்ளன. இதனால், கோத்தகிரியில் இருந்து, சமவெளி பகுதிக்கு செல்லும் வாகனங்கள் இடது புறமாக விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில், தேவையான இடங்களில் தடுப்பு சுவர் அமைத்து பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்.