/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; அவசர தொடர்புக்கு எண்கள் அறிவிப்பு

ADDED : செப் 22, 2024 11:36 PM
ஊட்டி : நீலகிரியில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
நீலகிரியில், 6 வட்டங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய, 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியினை கண்காணிக்க, 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள், 24 மணிநேரமும் கண்காணிப்பில் உள்ளனர்.
அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க, 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து வட்டங்களிலும், 3,500 முதல் நிலை மீட்பாளர்கள், 200 பேரிடர் கால நண்பர்களுக்கு பயிற்சி வழங்கி தயார் நிலையில் உள்ளனர்.
அவசர தொடர்புக்கு...
அவசரகால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண், 1077 மற்றும் 0423--2450034; 2450035, 'வாட்ஸ் ஆப்' 99431-26000 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தவிர, ஊட்டி கோட்டம், 0423--2445577; குன்னுார் கோட்டம், 0423--2206002; கூடலுார் கோட்டம் - 04262--261295; ஊட்டி வட்டம் - 0423--2442433; குன்னுார் வட்டம்- 0423--2206102; கோத்தகிரி வட்டம் - 04266--271718; குந்தா வட்டம் - 0423--2508123; கூடலுார் வட்டம்- 04262--261252; பந்தலுார் வட்டம் - 04262--220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.