தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; கால்வாய்களில் துார்வாரும் பணி துவக்கம்

 வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; கால்வாய்களில் துார்வாரும் பணி துவக்கம்

 வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; கால்வாய்களில் துார்வாரும் பணி துவக்கம்


ADDED : செப் 30, 2026 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 07:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீர் செல்ல வசதியாக கால்வாய்களில் துார்வாரும் பணி நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை மற்றும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள, மாவட்ட நிர்வாகம் தீவிர பேரிடர் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை விரைவில் துவங்க உள்ள நிலையில், பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில், 6 தாலுகாக்களில் நிலச்சரிவு மற்றும் பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ள, 156 இடங்களை, 24 மணி நேரமும் கண்காணிக்க, 29 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மலைப்பாதை சாலைகளில் மண் சரிவை தடுக்கவும், கன மழையால் சாலைகளில் விழும் மரங்கள், பாறைகள் மற்றும் மண் சரிவுகளை உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீரமைக்க பொக்லைன் போன்ற கனரக இயந்திரங்களும் முன்கூட்டியே தயார் நிலையில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, மாவட்டத்தில் மழை நீர் கால்வாய்களை துார்வாரி துாய்மைப்படுத்தம் பணிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் துவக்கி உள்ளன. அதில், ஊட்டி நகராட்சியில் உள்ள முக்கிய காய்வாய்களில் துார் வாரும் பணிகள் துவக்கப்பட்டன.ஊட்டி நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி கூறுகையில், ''ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. பேரிடர் தடுப்பு நடவடிக்கையாக வார்டுகளில் மழை நீர் செல்ல வசதியாக கால்வாய்கள் துார்வாரும் பணிகள் அனைத்து வார்டுகளிலும் மேற்கொள்ளப்படும்.

தற்போது, காந்தள் உட்பட ஒரு சிலர் வார்டுகளில் பணிகள் துவக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us