/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் அருகே வாகன விபத்தில் வட மாநில தொழிலாளி பலி
/
குன்னுார் அருகே வாகன விபத்தில் வட மாநில தொழிலாளி பலி
குன்னுார் அருகே வாகன விபத்தில் வட மாநில தொழிலாளி பலி
குன்னுார் அருகே வாகன விபத்தில் வட மாநில தொழிலாளி பலி
ADDED : மே 10, 2025 01:41 AM

குன்னுார் : குன்னுார் கரும்பாலம் அருகே டிப்பர் -ஸ்கூட்டி மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
குன்னுார் அருகே கிளண்டேல் எஸ்டேடில் பணிபுரியும் தொழிலாளர்கள் சுராஜ்,33, ரோகித்,28. இருவரும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். நேற்று சேலாஸ் சென்று பொருட்களை வாங்கி, ஸ்கூட்டியில் திரும்பி கொண்டிருந்தனர்.
கரும்பாலம் வளைவு அருகே வந்த போது, எதிரே வந்த டிப்பர் லாரியும், ஸ்கூட்டியும், மோதி விபத்துக்குள்ளானது. அதில், சம்பவ இடத்திலேயே சுராஜ் பலியானார். படுகாயமடைந்த ரோகித், குன்னுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சுராஜூக்கு கல்பனா என்ற மனைவியும், 9ம் வகுப்பு பயிலும் மகளும், 5ம் வகுப்பு பயிலும் மகனும் உள்ளனர். விபத்து நடந்த போது, நிறுத்தாமல் சென்ற லாரியையும், டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.