/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கெட்டுப்போன 60 கிலோ மீன்கள் அழிப்பு; ஐந்து கடைகளுக்கு 'நோட்டீஸ்'
/
கெட்டுப்போன 60 கிலோ மீன்கள் அழிப்பு; ஐந்து கடைகளுக்கு 'நோட்டீஸ்'
கெட்டுப்போன 60 கிலோ மீன்கள் அழிப்பு; ஐந்து கடைகளுக்கு 'நோட்டீஸ்'
கெட்டுப்போன 60 கிலோ மீன்கள் அழிப்பு; ஐந்து கடைகளுக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஜன 30, 2024 10:59 PM

ஊட்டி;ஊட்டியில் அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் கெட்டுப்போன, 60 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
ஊட்டியில், நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார் சாலை, சேரிங்கிராஸ், பஸ் ஸ்டாண்ட், பிங்கர்போஸ்ட், தலைகுந்தா பகுதிகளில் மீன்கடைகள் செயல்பட்டு வருகிறது. மீன்கள் கெட்டுபோகாமல் இருக்க, 'பார்மலின்' எனப்படும் ரசாயனம் கலந்து மீன்கள் பதப்படுத்தப்படுவதாக பரவலாக புகார் எழுந்தது.
கலெக்டர் அருணா உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சிவராஜ், நந்தகுமார்.
மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜோதி லட்சுமணன், ஆய்வாளர்கள் சில்பா, ஆனந்த் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்ரீதரன் ஆகிய மூன்று துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள் இணைந்து, ஊட்டி மார்க்கெட், சேரிங்கிராஸ், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள 20க்கு மேற்பட்ட மீன்கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், கெட்டுப்போன, 60 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. 5 வியாபாரிகளுக்கு விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பபட்டது. 10 கடைகளுக்கு தலா, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜோதி லட்சுமணன் கூறுகையில், ''கெட்டுப்போன, 60 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. தரமான மீன்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கடைகளை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.