/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வணிக வளாக கடைகளை காலி செய்ய 'நோட்டீஸ்'; வியாபாரிகள் எதிர்ப்பு
/
வணிக வளாக கடைகளை காலி செய்ய 'நோட்டீஸ்'; வியாபாரிகள் எதிர்ப்பு
வணிக வளாக கடைகளை காலி செய்ய 'நோட்டீஸ்'; வியாபாரிகள் எதிர்ப்பு
வணிக வளாக கடைகளை காலி செய்ய 'நோட்டீஸ்'; வியாபாரிகள் எதிர்ப்பு
ADDED : ஜூன் 01, 2025 10:11 PM

கூடலுார்:
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, புதிய வணிக வளாகம் கட்ட வசதியாக, கடைகளை காலி செய்ய வலியுறுத்தி, நகராட்சி வழங்கிய நோட்டீஸ்க்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, 55 கடைகளுடன், நகராட்சி வணிகவளாகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதிய வணிக வளாகம் கட்ட வசதியாக, தற்போதுள்ள வணிக வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்யும்படி வியாபாரிகளுக்கு நகராட்சி 'நோட்டீஸ்' வழங்கியுள்ளது.
அதில், 'பாரதிதாசன் வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டு, 30 ஆண்டுகள் ஆகியுள்ளது. கட்டடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, வியாபாரிகள் கடைகளை காலி செய்து நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில், சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஏப்., மே., மாத நிலுவையில் உள்ள வாடகை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, வழக்கு கட்டணத்தை, வாடகையுடன் சேர்த்து வசூலிக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வியாபாரிகள் கூறுகையில், 'நகராட்சி சார்பில் ஏற்கனவே, கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து மேற்கூரை அமைத்துள்ளனர். இந்நிலையில், திடீரென கடையை காலி செய்ய, நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கியிருப்பது வாழ்வாதாரத்தை பாதிக்கும்.
வணிக வளாக கட்டடம் உறுதி தன்மையுடன் உள்ளதால், பராமரிப்பு பணிகள் மட்டும் மேற்கொண்டால், மேலும். பல ஆண்டுகள் உறுதியாக இருக்கும்.
எனவே, கட்டடத்தை இடிக்கும் முடிவினை கைவிட்டு, பராமரிப்பு பணிகளை செய்து தர வேண்டும்' என்றனர். இது தொடர்பாக நகராட்சி வணிக வளாக வியாபாரிகள், நகராட்சி தலைவர், கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர்.