ADDED : பிப் 02, 2024 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நடப்பு கல்வி ஆண்டிற்கு புதிய தொழில் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழில் பள்ளிகளில் புதிய தொழில் பிரிவுகள், தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணைய தளம் மூலமாக, வரவேற்கப்படுகின்றன.
நடப்பு கல்வி ஆண்டிற்கு அங்கீகாரம் பெற்ற, ஒரு தொழில் பள்ளிக்கு விண்ணப்பித்தால் போதுமானது. வரும், பிப்., 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

