/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பேரிடர் பாதிப்பு நேரிட்டால் தகவல் தர எண்கள் அறிவிப்பு
/
பேரிடர் பாதிப்பு நேரிட்டால் தகவல் தர எண்கள் அறிவிப்பு
பேரிடர் பாதிப்பு நேரிட்டால் தகவல் தர எண்கள் அறிவிப்பு
பேரிடர் பாதிப்பு நேரிட்டால் தகவல் தர எண்கள் அறிவிப்பு
ADDED : ஆக 05, 2025 10:41 PM
ஊட்டி,; மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. பேரிடர் பாதிப்புள்ள பகுதிகளில், அரசு அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆறு தாலுகாவிலும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், மழையால் பாதிப்பு நேரிட்டால், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்க, தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
நீலகிரியில் கனமழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க அவசர கால எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077 மற்றும் 0423---2450034, 0423-2450035 எண்களை மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கோட்ட எண்கள் அறிவிப்பு தவிர, 'வாட்ஸ் அப்' எண்: 9488700588ல் தகவல் அளிக்கலாம். மேலும், 'ஊட்டி கோட்டம்- 0423- 2445577; குன்னுார் கோட்டம்- 0423-2206002; கூடலுார் கோட்டம்-04262 -261296; ஊட்டி வட்டம்- 0423 -2442433; குன்னுார் வட்டம்- 0423 -2206102; கோத்தகிரி வட்டம்- 04266-271718; குந்தா வட்டம்- 0423--2508123; கூடலுார் வட்டம் -04262 -261252; பந்தலுார் வட்டம் -04262- -220734,' ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.