ஓட்டு எண்ணிக்கை குறித்த புகாருக்கு எண்கள் அறிவிப்பு
ஓட்டு எண்ணிக்கை குறித்த புகாருக்கு எண்கள் அறிவிப்பு
UPDATED : மே 01, 2026 07:09 PM
ADDED : மே 01, 2026 07:01 PM
ஊட்டி: சட்டசபை தேர்தல் ஒட்டு எண்ணிக்கை குறித்து புகார் இருப்பின், தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளில் தேர்தல் முடிந்து, 4ம் தேதி, ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஓட்டு எண்ணிக்கை குறித்து, புகார்கள் இருப்பின் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
அதற்காக, மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மூன்று சட்டசபை தொகுதிகளின் தேர்தல் கட்டுப்பாட்டு அறை வரும், 4ம் தேதி வரை, 24 மணி நேரமும் செயல்படும்.
அதில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் (0423 -2957101); ஊட்டி சட்டசபை தொகுதி (0423- - 2957731); கூடலுார் சட்டசபை தொகுதி (04262-295125); குன்னுார் சட்டசபை தொகுதி (0423- - 2951374) ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
