ADDED : அக் 18, 2026 03:47 PM

ஊட்டி: மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நடந்தது.
அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஆனந்தன் தலைமை வகித்தார். ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் நேரு பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சாந்தி ஏழு நாட்கள் நடைபெறவுள்ள சிறப்பு முகாமின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியை ஆர்த்தி தொகுத்து வழங்கினார். சிறப்பு முகாமில் மாணவர்களிடையே சமூகப் பொறுப்பு, சேவை மனப்பான்மை, ஒற்றுமை மற்றும் தலைமைப் பண்புகளை வளர்ப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆசிரியர் ராம்கி நன்றி கூறினார்.
