/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் தொல்லை.. நிரந்தர தீர்வு எப்போது?
/
அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் தொல்லை.. நிரந்தர தீர்வு எப்போது?
அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் தொல்லை.. நிரந்தர தீர்வு எப்போது?
அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் தொல்லை.. நிரந்தர தீர்வு எப்போது?
ADDED : அக் 23, 2024 09:59 PM

மஞ்சூர்: மஞ்சூர் பஜாரில் பல ஆண்டுகளாக அகற்றப் படாத ஆக்கிரமிப்பு களால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குந்தா தாலுகாவின் தலைமையிடமாக மஞ்சூர் உள்ளது. இங்குள்ள, 5 வட்டத்திற்கு உட்பட்ட, 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மஞ்சூர் வந்து செல்கின்றனர்.
தவிர, கோவை, மேட்டுப்பாளையம், அன்னுார், காரமடை, அவிநாசி உள்ளிட்ட வெளியிடங்களிலிருந்தும் ஏராளமானோர் வியாபார நிமிர்த்தமாக வருகை தருகின்றனர். உள்ளூர், பிற மாவட்டத்திலிருந்து அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கிறது.
ஆக்கிரமிப்பும், நெரிசலும்
மஞ்சூர் பஜாரிலிருந்து கீழ்குந்தா சாலை, மேல்பஜார் சாலை, மஞ்சூர் போலீஸ் ஸ்டேஷன் செல்லும் சாலைகள் முக்கிய சாலையாக உள்ளது. குறுகலான இச்சாலைகளில் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகள்; புற்றீச்சல் போல் பெருகியுள்ள வாகனங்களால் பல்வேறு பிரச்னைகள் தொடர்கிறது. சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தவிர, குறிப்பிட்டுள்ள சாலையில் இருப்புறம் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் இடையூறுகாரணமாக, 5 நிமிடத்திற்குள் சாலையை கடக்க வேண் டிய இடத்தில், அரை மணி நேரம் ஆகிறது. குறிப்பாக, அரசு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சாலையை கடந்து செல்ல முடியாமல் படாதபாடு படுவதால் பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
காலை, மாலை மற்றும் மதிய வேளை 'பீக்' ஹவர்சாக உள்ளது. அந்த சமயங்களில் அரசு பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தி செல்வதும், பின், போலீசார் வந்து சம்மந்தப்பட்ட வாகன ஓட்டுனர்களை தேடி பிடித்து வந்து, வாகனங்களை அப்புறப்படுத்தும் தொடர்கிறது. இந்த சமயங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.
என்ன செய்கிறது நெடுஞ்சாலைத்துறை
இங்குள்ள நெரிசல் மிகுந்த சாலைகள் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 'நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகள் குறித்து நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,' என, பொதுமக்கள் நெடுஞ்சாலை துறைக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்காததால் மக்கள்கடும் அதிருப்தியில் உள்ளனர். இதையடுத்து, பொதுநல அமைப்பினர் சிலர், மாநில முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறுகையில், '' மஞ்சூர் பஜாரில், நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு குறித்து மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரவு வந்ததும், ஆய்வு மேற்கொண்டு பாரபட்சம் பார்க்காமல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்,'' என்றார்.