/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 04, 2024 09:45 PM

ஊட்டி; ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், 'பணியிடத்தில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தாக்கப்படுவதை தடுத்து பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள், 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.
அங்கு பாதுகாப்புக்காக இரவு காவலர்கள் கூட இல்லை. செவிலியர்கள் பாதுகாப்பு கருதி, இரவு நேர காவலர்களை நியமிக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளை சுற்றி பாதுகாப்பு சுவர்கள் அமைக்கப்பட வேண்டும். இப்பகுதியில் நடமாடும் நபர்களை கண்காணிக்க, கேமராக்கள் பொருத்தப்படவேண்டும்.
என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.