/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உணவில் ஊட்டச்சத்து அவசியம்; விழிப்புணர்வு கூட்டத்தில் 'அட்வைஸ்'
/
உணவில் ஊட்டச்சத்து அவசியம்; விழிப்புணர்வு கூட்டத்தில் 'அட்வைஸ்'
உணவில் ஊட்டச்சத்து அவசியம்; விழிப்புணர்வு கூட்டத்தில் 'அட்வைஸ்'
உணவில் ஊட்டச்சத்து அவசியம்; விழிப்புணர்வு கூட்டத்தில் 'அட்வைஸ்'
ADDED : நவ 27, 2024 09:13 PM
குன்னுார்; குன்னுார் வெலிங்டன் பேரக்ஸ் ஹோலி ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளியில், நுகர்வோர் மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தமிழாசிரியை சுஜாதா தலைமை வகித்தார்.
கூடலுார் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''நுகர்வோர் பாதுகாப்பு, தகவல் பெறும் உரிமை சட்டம், நுகர்வோர் புகார் தெரிவிக்கும் முறை, குறை தீர்ப்பு, நுகர்வோர் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைக்கான உரிமைகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். தரமான பொருட்களை தேர்வு செய்து வாங்க வேண்டும். உணவு பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள சேர்மங்கள், ஊட்டச்சத்து விவரங்கள் அறிந்து உட்கொள்வதுடன், துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
'சைல்ட்' அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசுகையில், ''குழந்தைகளுக்கும் சட்டப்படியான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைதவிர்க்க, முன்னெச்சரிக்கை தெரிவிக்கும் பெற்றோர், ஆசிரியரின் அறிவுறுத்தல்களை கட்டாயம் கேட்க வேண்டும்,'' என்றார்.
குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.