/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரத்தில் சிதறி கிடக்கும் மரக்கிளைகளால் இடையூறு
/
சாலையோரத்தில் சிதறி கிடக்கும் மரக்கிளைகளால் இடையூறு
சாலையோரத்தில் சிதறி கிடக்கும் மரக்கிளைகளால் இடையூறு
சாலையோரத்தில் சிதறி கிடக்கும் மரக்கிளைகளால் இடையூறு
ADDED : அக் 15, 2024 09:59 PM
கோத்தகிரி : கோத்தகிரி சாலையில் சிதறி கிடக்கும் மரக்கிளைகளால் இடையூறு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி- ஊட்டி சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன், கார்ஸ்வுட் மற்றும் வெஸ்ட் புரூக் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் இருந்த வானுயர்ந்த அபாய கற்பூர மரங்கள் வெட்டப்பட்டன. பெரிய மரத்துண்டுகள் லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய மரக்கிளைகள் மற்றும் குச்சிகள் சாலை ஓரத்தில் அப்படியே விடப்பட்டுள்ளன.
இதனால், எதிரில் வரும் வாகனங்கள் வளைவில் ஒதுங்கும் போது இடையூறு ஏற்படுகிறது. தவிர விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.
இவ்வழித்தடத்தில் அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள் உட்பட, நுாற்றுக்கணக்கான தனியார் வாகனங்கள் நாள்தோறும் சென்று வருவதால், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க, மரக்கிளை மற்றும் குச்சிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.