/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

ADDED : மார் 01, 2024 10:00 PM

ஊட்டி;ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால், வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊட்டி படகு இல்லம் சாலை ஓரத்தில், 50 க்கும் மேற்பட்டோர் கடைகள்வைத்து, வியாபாரம் செய்து வருகின்றனர். இருபுறமும் வைக்கப்பட்டுள்ள கடைகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த, 20 க்கும் மேற்பட்ட கடைகளை, நேற்று காலை காவல்துறை உதவியுடன், நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். அப்போது, 'தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது,' எனக்கூறி, வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம், நகர திட்டம் அலுவலர் ரவி மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், 'கமிஷனரிடம் பேசி இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,' என கூறியதை அடுத்து, வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.