ADDED : ஆக 04, 2025 07:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் டால்பின் நோஸ் காட்சி முனை பகுதியில் உள்ள கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
குன்னுார் டால்பின் நோஸ் பகுதி வனத்துறையின் பராமரிப்பில் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கழிப்பிடத்தில் ஒருவருக்கு, 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. எனினும், கழிப்பிடம் பராமரிப்பு இல்லாததால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இது தொடர்பாக, சுற்றுலா பயணிகள் புகார் தெரி வித்தும் தீர்வு கிடைக்க வில்லை. சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, இந்த கழிப்பிடத்தை பராமரித்து சுகாதாரமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.