/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராம சபை கூட்டத்திற்கு வராத அதிகாரி: பொது மக்கள் அதிருப்தி
/
கிராம சபை கூட்டத்திற்கு வராத அதிகாரி: பொது மக்கள் அதிருப்தி
கிராம சபை கூட்டத்திற்கு வராத அதிகாரி: பொது மக்கள் அதிருப்தி
கிராம சபை கூட்டத்திற்கு வராத அதிகாரி: பொது மக்கள் அதிருப்தி
ADDED : ஜன 28, 2024 11:40 PM
கூடலூர்;முதுமலை, மசினகுடி ஊராட்சி கிராம சபை கூட்டம் மாயாரில் நடந்தது. கூட்டத்தில், பங்கேற்ற பொதுமக்கள், வனத்துறை தொடர்பான பிரச்னைகளுக்கு பதில் கூற வேண்டிய மசினகுடி வனகோட்ட துணை இயக்குனர் கூட்டத்தில் பங்கேற்காததால் அதிருப்தி அடைந்து, கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.
தொடர்ந்து, மாலை, மசினகுடி ஊராட்சி அலுவலகத்தில், துணைத் தலைவர் நாகேஷ் தலைமையில் மீண்டும் கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், ஊட்டி ஆர்.டி.ஓ., மகாராஜன், தாசில்தார் சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சாம்சாந்தகுமார், கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அண்ணாதுரை, குமார், வனச்சரகர் ஜான் பீட்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மக்கள் பிரச்னைகள் குறித்து, குறிப்பாக வனத்துறை பிரச்னைகள் குறித்து பேசினார். 'வனத்துறை பிரச்னைகள் குறித்து பதிலளிக்க துணை இயக்குனர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.
மசினகுடி வன கோட்ட துணை இயக்குனர், பங்கேற்கும் கூட்டத்தை அடுத்த மாதம் மசினகுடியில் நடத்துவது;
அதில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.