/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலப்பதாக புகார் நிரந்தர தீர்வுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அவசியம்

ADDED : ஜன 28, 2025 10:06 PM

குன்னுார்; 'குன்னுார் உபதலை பழத்தோட்டம் பகுதியில், மக்களுக்கு வினியோகம் செய்யும் குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட, பழத்தோட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு நீரோடை பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவது தொடர்பான புகாரின் பேரில், கடந்த ஆண்டு இறுதியில், கிணற்று நீரின் மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. 'குடிநீருக்கு இந்த நீர் பயன்படுத்துவது உகந்ததல்ல,' என, பொது சுகாதார பரிசோதனை மையம் சார்பில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 'கிணற்றை முழுமையாக துார்வாரி சீரமைக்கப்படும்,' என, அதிகாரிகள் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்பகுதி மக்கள் கூறுகையில்,''நீரோடையில் இருந்து முறையாக குழாய் வைத்து நீர் எடுக்கப்பட்டபோதும், கழிவுநீர் வெளியேறி அருகில் உள்ள தோட்டத்தின் வழியாக வந்து கிணற்று நீரில் கலக்கிறது. இதனை தடுப்பதுடன், பாதுகாப்பான குடிநீர் வழங்க, துார் வாரி சீரமைப்பதுடன், சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்வு காணவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும்,'' என்றனர்.