/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதர் மண்டிய அலுவலர் குடியிருப்பு! புதுப்பிக்க மக்கள் வலியுறுத்தல்
/
புதர் மண்டிய அலுவலர் குடியிருப்பு! புதுப்பிக்க மக்கள் வலியுறுத்தல்
புதர் மண்டிய அலுவலர் குடியிருப்பு! புதுப்பிக்க மக்கள் வலியுறுத்தல்
புதர் மண்டிய அலுவலர் குடியிருப்பு! புதுப்பிக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 23, 2025 10:45 PM
உடுமலை : புதர் மண்டி கிடக்கும் ரயில்வே ஊழியர், அலுவலர் குடியிருப்பை புதுப்பித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் - பாலக்காடு மீட்டர் கேஜ் ரயில்பாதை, அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு, 2015ல், ரயில் போக்குவரத்து துவங்கியது. அகல ரயில்பாதை பணிகளின் போது, ரயில்வே ஸ்டேஷன் சார்ந்த கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சில பணிகள் மேற்கொள்ளப்படாமல் இதுவரை இழுபறியாக உள்ளது. குறிப்பாக, ஸ்டேஷன் அருகிலுள்ள ஊழியர் குடியிருப்பும், ராமசாமிநகர் ரோடு சந்திப்பு அருகிலுள்ள, அலுவலர் குடியிருப்பும் புதுப்பிக்கப்படவில்லை.
பயன்பாடு இல்லாமல் விடப்பட்டதால், அந்த கட்டடங்கள் பாழடைந்து காணப்படுகிறது; கட்டடங்களை சுற்றிலும், புதர் மண்டி, விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளது.
மேலும், நகரின் மையப்பகுதியிலுள்ள இவ்விடங்களில் இரவு நேரங்களில், சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகிறது.
பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளதால், காலியிடத்தையும், குடியிருப்பை சுற்றிலும் புதர்களை மட்டுமாவது அகற்றி, துாய்மைப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், பல ஆண்டுகளாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகில், ரயில்வேக்கு சொந்தமான காலியிடம் ஆக்கிரமிக்கப்படாமல் தவிர்க்கவும், குடியிருப்புகளை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ரயில்வே கோட்டத்துக்கு மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.