/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள்; அதிகாரிகள் ஆய்வு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு

ADDED : மே 23, 2025 07:07 AM
ஊட்டி : பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து கேட்கப்பட்டது.
ஊட்டி அருகே சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பழங்குடியின கிராமமான, கோக்கால் பகுதியில் 2025--26ம் ஆண்டிற்கான எம்.எல்.ஏ., மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நடந்து வரும் தடுப்பு சுவருடன் கூடிய நடைபாதை பணிகளை, கலெக்டர லட்சுமி பவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின், ஊட்டி ஊராட்சி ஒன்றியம் கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சிக்கடி பகுதியில் ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ், 7 வீடுகளில் தலா, 92 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டுமான பணிகள் உட்பட, 17 வீடுகளில் நடந்து வரும் பல்வேறு கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.
திருச்சிகடி பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்திட்டத்தின் கீழ், 5.15 லட்சம் ரூபாய் மதிப்பில் பழங்குடியினருக்கான மண்பானை விற்பனை நிலையத்தில் மகளிர் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பல்வேறு மண்பானை வகைகளை பார்வையிட்டு பழங்குடிகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.