/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் போலி 'கிளினிக்' 'சீல்' வைத்த அதிகாரிகள்
/
ஊட்டியில் போலி 'கிளினிக்' 'சீல்' வைத்த அதிகாரிகள்
ADDED : செப் 27, 2024 12:43 AM
ஊட்டி : ஊட்டியில் செயல்பட்ட சித்தா 'கிளினிக்' சீல் வைக்கப்பட்டு, போலி மருத்துவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி தலைக்குந்தா பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக இஸ்மாயில், 56, என்பவர் சித்த மருத்துவராக இருந்துள்ளார்.
இந்நிலையில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமையில், தலைக்குந்தா பகுதியில் செயல்பட்டு வந்த சித்த மருத்துவமனையில் நேற்று ஆய்வு நடந்தது.
அதில், இஸ்மாயில், 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு கடந்த, 25 ஆண்டுகளாக சித்த மருத்துவராக சிகிச்சை அளித்து வந்துள்ளது தெரிய வந்தது.
மேலும், இஸ்மாயிலின் கிளினிக்கில் சோதனை நடத்தியதில் அவர் முறையாக சித்த மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவர் சான்றிதழை வைத்திருந்தது தெரிய வந்தது.
அவரது கிளினிக்கில் இருந்த காலாவதியான மருந்துகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அவரை பிடித்த, மாவட்ட சித்த மருத்துவ குழுவினர், புதுமந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது கிளினிக்கிற்கும் சீல் வைக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களில் மாவட்ட சித்த மருத்துவ துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், 4 போலி சித்த கிளினிக்குகள் 'சீல்' வைக்கப்பட்டன.