/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசின் வளர்ச்சி பணிகளில் அலுவலர்கள் கவனம் செலுத்தணும் : மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
/
அரசின் வளர்ச்சி பணிகளில் அலுவலர்கள் கவனம் செலுத்தணும் : மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
அரசின் வளர்ச்சி பணிகளில் அலுவலர்கள் கவனம் செலுத்தணும் : மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
அரசின் வளர்ச்சி பணிகளில் அலுவலர்கள் கவனம் செலுத்தணும் : மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
ADDED : டிச 18, 2025 07:07 AM
ஊட்டி: 'மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளில் துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகா பகுதிகளில் நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறைகளின் கீழ், பல கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், வனத்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம், சுகாதாரத்துறை, சுற்றுலாத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து, மாவட்ட கலெக்டர் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், ஊட்டியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா பேசுகையில்,''நீலகிரியில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளில் அந்தந்த துறை அதிகாரிகள் போதிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நிர்வாக அனுமதி பெறப்பட்டவுடன் பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும். நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மாவட்டத்தில் நடந்து வரும் நலம் காக்கும் மருத்துவ முகாமில், 24 ஆயிரம் நபர்கள் பங்கேற்று பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு பயன் பெற்றனர். முகாமினை மிக சிறப்பாக நடத்தி முடித்த துறை அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது,'' என்றார்
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் அபிலாஷா கவுர், வன அலுவலர்கள் கவுதம், வெங்கடேஷ் பிரபு, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

