/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிலாளர் நலதுறை சார்பில் ரூ . 5 லட்சம் நிவாரணம்
/
தொழிலாளர் நலதுறை சார்பில் ரூ . 5 லட்சம் நிவாரணம்
ADDED : பிப் 08, 2024 10:36 PM

ஊட்டி, -ஊட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில், 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, காந்திநகர் பகுதியில் தடுப்பு சுவர் கட்டுமான பணியின் போது, கழிப்பிட கட்டடம் இடிந்து விழுந்ததில், 6 பெண்கள் சம்பவ இடத்தில் பலியாகினர்.
காயமடைந்த இரண்டு பெண்கள்; இரண்டு ஆண்கள், ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மருத்துவ மனைக்கு சென்று, காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினர்.
பின், அமைச்சர் கணேசன் நிருபர்களிடம் கூறுகையில், ''முதல்வர் உத்தரவுப்படி சிகிச்சை பெறுபவர்களை பார்த்து ஆறுதல் கூறினேன்.
தொழிலாளர் நல துறை சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் வீடு, இலவச வீட்டுமனை பட்டாவை, ஆய்வு மேற்கொண்டு வழங்க உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.
இதன்படி, உயிரிழந்த, 6 பேரின் குடும்பத்தாருக்கு தலா, 7.50 லட்சம் ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

