/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளாவில் ஓணம் பண்டிகை எதிரொலி; ஊட்டி மலை காய்கறிகளுக்கு கிராக்கி
/
கேரளாவில் ஓணம் பண்டிகை எதிரொலி; ஊட்டி மலை காய்கறிகளுக்கு கிராக்கி
கேரளாவில் ஓணம் பண்டிகை எதிரொலி; ஊட்டி மலை காய்கறிகளுக்கு கிராக்கி
கேரளாவில் ஓணம் பண்டிகை எதிரொலி; ஊட்டி மலை காய்கறிகளுக்கு கிராக்கி
ADDED : செப் 03, 2025 10:45 PM

ஊட்டி; கேரள மாநில ஓணம் பண்டிகை எதிரொலியாக, ஊட்டி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் அனுப்பப்பட்டு வருகிறது.
கேரளாவில் ஓணம் பண்டிகை இம்மாதம், 5ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள் வழக்கத்தை விட அதிகளவில் அனுப்பப்பட்டு வருகிறது. ஊட்டி மார்க்கெட்டுக்கு, கடந்த சில நாட்களாக மலை காய்கறி வரத்து, 15 டன்னாக இருந்தது.
இந்நிலையில், ஓணம் பண்டிகை எதிரொலியாக, இங்கு உற்பத்தி செய்யப்படும், கேரட், பீட்ரூட், காளிபிளவர், முட்டைகோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக ஊட்டி மார்க்கெட்டுக்கு, 20 டன் அளவுக்கு வரத்து உள்ளது.
மலைகாய்கறி வியாபாரிகள் கூறுகையில், 'ஓணம் பண்டிகைக்காக கேரளா மட்டுமல்லாமல், மேட்டுப்பாளையம், சென்னை, கோவை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுவதால், உள்ளூர் சந்தைகளில் காய்கறி விலை அதிகரித்துள்ளது. இது ஓணம் பண்டிகை முடியும் வரை தொடரும்,' என்றனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில்,' ஓணம் பண்டிகை காரணமாக திடீரென காய்கறி விலை உயர்ந்துள்ளது. உள்ளூரில் காய்கறி விலை மேலும் அதிகரிக்காத வகையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.