/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுவனுக்கு பாலியல் கொடுமை; ஒருவர் கைது
/
சிறுவனுக்கு பாலியல் கொடுமை; ஒருவர் கைது
ADDED : ஜூலை 25, 2025 08:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; பாலக்காடு அருகே, சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கரிம்பா பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா, 51, இவர் நேற்று முன்தினம் மாலை பீமநாடு பகுதியில் கால்பந்து விளையாடி விட்டு, வீட்டுக்கு சென்ற 15 வயது சிறுவனை இழுத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்தார்.
இது தொடர்பாக, சிறுவனின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், மண்ணார்க்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, அப்துல்லாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.