sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 சத்துகுறைவால் 10ல் ஒருவருக்கு சினைப்பை நீர்கட்டி துரித உணவுகளை தவிர்க்க கருத்தரங்கில் வலியுறுத்தல்

/

 சத்துகுறைவால் 10ல் ஒருவருக்கு சினைப்பை நீர்கட்டி துரித உணவுகளை தவிர்க்க கருத்தரங்கில் வலியுறுத்தல்

 சத்துகுறைவால் 10ல் ஒருவருக்கு சினைப்பை நீர்கட்டி துரித உணவுகளை தவிர்க்க கருத்தரங்கில் வலியுறுத்தல்

 சத்துகுறைவால் 10ல் ஒருவருக்கு சினைப்பை நீர்கட்டி துரித உணவுகளை தவிர்க்க கருத்தரங்கில் வலியுறுத்தல்


ADDED : டிச 16, 2025 05:31 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில், உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

தலைமை வகித்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதி பேசியதாவது:

தரமற்ற மற்றும் கலப்படம் சார்ந்த உணவு பொருட்கள் பயன்படுத்துவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு பாதிப்பு அதிகம். சுவைக்காக பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோ, நாக்கில் பட் டவுடன் சுவை இருப்பது போன்ற உணர்வை காண்பிக்கும். இதனை சமையல் தெரியாதவர்களும் சுவைக்காக பயன்படுத்துகின்றனர். 'வீட்டில் சமைக்கும் உணவு சுவையில்லை,' என, ஒதுக்கி விடுகின்றனர்.

அஜினோமோட்டோ பயன்படுத்துவதால், நரம்பு, குடல், தோல் உள்ளிட்டவை பாதித்து நோய்கள் ஏற்படுகிறது. வேதிப்பொருட்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நன்மை. 'அயோடின் சால்ட்' போன்றவையும் உடலுக்கு நன்மை தருகிறது.

உடனே புகார் அளிக்கலாம் உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவுகளின் தரம் குறித்து அறிந்து கொள்வதுடன், குறைபாடுகள் இருந்தால், 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அவர்களின் பெயர் ரகசியம் காக்கப்படும், என்றார்.

குன்னுார் மக்கள் பாதுகாப்பு அமைப்பு தலைவர் மனோகரன் பேசுகையில்,''ஒவ்வொரு நாட்டிற்கும் தனி உணவு கலாசாரம் உள்ளது. சீன உணவுக்கு பலரும் அடிமையாகி பல நோய்களுக்கு ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சத்துக்குறைவு ஏற்பட்டு, 10ல் ஒரு பெண் பிள்ளைக்கு சினைப்பை நீர்க்கட்டி நோய்க்கு ஆளாகியுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

அஜினோமோட்டோ மற்றும் துரித உணவுகளை தவிர்ப்பதும், உடற்பயிற்சியை மேற்கொள்வதும் அவசியம். குழந்தைகளின் உணவில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. சிறுதானிய உணவுகளை உண்ண பழகி கொள்வதுடன், அதிகளவில் பேக்கரி மற்றும் உணவக உணவுகளை தவிர்ப்பது அவசியம்,'' என்றார்.

உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சிவராஜ் கலப்படம் கண்டறிதல் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். அமைப்பு உறுப்பினர் லட்சுமி நாராயணன் வரவேற்றார். செயலாளர் ஆல்துரை நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us