/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை தாக்கி ஒருவர் காயம்; வனத்துறையினர் விசாரணை
/
யானை தாக்கி ஒருவர் காயம்; வனத்துறையினர் விசாரணை
ADDED : ஆக 17, 2025 09:29 PM
கூடலுார்; கூடலுார் ஓவேலி அருகே, காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயமடைந்தார்.
கூடலுார் ஓவேலி எல்லைமலை பகுதியை சேர்ந்தவர், நவ்பால். இவர், நேற்று காலை, 9:30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் ஆரூட்டுபாறை கடந்து, கூடலுார் நோக்கி வந்தார். சுபாஷ் நகர அருகே, திடீரென சாலைக்கு வந்த காட்டு யானை, தும்பிக்கையில் அவரை தாக்கியது. கீழே விழுந்த அவர், காயமடைந்தார். இருசக்கர வாகனம் தேயிலை தோட்டத்தில் விழுந்தது.
அப்பகுதியினர், சப்தமிட்டு யானையை விரட்டி, அவரை மீட்டு, சிகிச்சைக்காக கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிசைக்காக கேரள மா நிலம் பெருந்தல்மன்னா தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சம்பவம் குறித்து வனச்சரகர் வீரமணி மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
வனத்துறையினர் கூறுகையில் , 'அப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானையை, வன ஊழியர்கள் விரட்டி வரும்போது, எதிர்பாராமல் யானை, அவரை தாக்கி உள்ளது. வனத்துக்குள் விரட்டப்பட்ட யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.