தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ யானை தாக்கியதில் ஒருவர் காயம்

யானை தாக்கியதில் ஒருவர் காயம்

யானை தாக்கியதில் ஒருவர் காயம்


ADDED : அக் 07, 2025 09:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2025 09:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்; கூடலுார் தேவர்சோலை கொட்டாய்மட்டம் பாரகல் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்,38. இவர் நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, எதிரே காட்டு யானை வந் துள்ளது. யானையை பார்த்தவர் பைக்கை நிறுத்திவிட்டு ஓடி தப்பிக்க முயன்றார். யானை அவரை துரத்தி தாக்கி சென்றுள்ளது. அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். வனத் துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் நடந்த பகுதியில் ஆய்வு செய்தனர். யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மக்கள் கூறுகையில், 'தொடரும், யானை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us