தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கரடி தாக்கி ஒருவர் காயம் புலி தாக்கி பசுமாடு பலி

கரடி தாக்கி ஒருவர் காயம் புலி தாக்கி பசுமாடு பலி

கரடி தாக்கி ஒருவர் காயம் புலி தாக்கி பசுமாடு பலி


ADDED : ஆக 25, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் அருகே கரடி தாக்கி ஒருவர் காயமடைந்தார்.

கூடலுார் மண்வயல் சேமுண்டி பகுதியில், பிரமோத் என்பவரின் பசுமாட்டை நேற்று அதிகாலை புலி தாக்கி கொன்றது. அப்பகுதியில், ஆய்வு செய்த வனத்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதி மக்கள், பசுமாட்டை புலி தாக்கியது என தெரிவித்தனர்.

இந்நிலையில், தேவர்சோலை அருகே, தேவன் நம்பர்–2 பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 60, என்பவர் நேற்று காலை, 6:45 மணிக்கு கூடலுார் செல்வதற்காக அங்குள்ள நிழல்குடை அருகே, நின்றுள்ளார். அப்போது, கரடி அவரை தாக்கியது.

அவர் சப்தமிட்டதால் கரடி, அவரை விட்டு சென்றது. காயமடைந்த அவரை மீட்ட மக்கள், சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தால், உள்ளூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us