/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மசினகுடி பொக்காபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
/
மசினகுடி பொக்காபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
மசினகுடி பொக்காபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
மசினகுடி பொக்காபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
ADDED : செப் 30, 2025 10:15 PM

கூடலுார்,; முதுமலை, மசினகுடி பொக்காபுரம் அருகே, காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
முதுமலை மசினகுடி, பொக்காபுரம் தொட்லிங்கி பகுதியை சேர்ந்தவர் புட்மாதன், 42. இவர் நேற்று, காலை ஒற்றையடி பாதை வழியாக, சோலுார் பகுதிக்கு நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த காட்டு யானை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக மசினகுடி ஆரம் சுகாதார நிலையம் கொண்டு வந்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வனச்சரகர் தனபால் மற்றும் வன ஊழியர்கள் விசாரணை மேற்கொண்டனர். மசினகுடி இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் எஸ்.ஜ., குணசேகர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.